ஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் 

Published By: Priyatharshan

27 May, 2020 | 05:15 PM
image

மலையகத்தின் மூத்த அரசியல்வாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று கொழும்பில் காலமானார்.

இச்செய்தி நாட்டில் மிகுந்த சோகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .

அமரர் தொண்டமானின் மறைவையொட்டி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட மலையக அரசியல் தலைவர்கள் பலரும்தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

நேற்று மாலை கொழும்பில் இலங்கைக்கான  இந்திய, புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை  சந்தித்துவிட்டு பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பிய போது திடீரென  சுகவீனமுற்று  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவர் காலமானார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி நான்காம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான், மலையகத்தின் ஆளுமை மிக்க தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரானார்.

1990 ஆம் ஆண்டு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறுமுகம் தொண்டமான், முதல் தடவையாக 1994 ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றார்.

பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர் மலையக மக்களுக்காக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார் .அவரது இழப்பு மலையகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துணிந்து குரல் கொடுத்து வந்தது மாத்திரமன்றி, அவர்களுக்கு ஓர் பாதுகாவலனாகவும் ஆறுமுகன் தொண்டமான்  விளங்கினார் என்றால் மிகையாகாது.

ஓர் சிறந்த முன்மாதிரியான தலைவனை இன்று மலையகம் இழந்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது . அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவரது இழப்பை அறிந்து மலையகத் தலைவர் கள் அனைவரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைசெலுத்தி வருகின்றனர்.

அவரது இழப்பு ஒருவகையில் முழு நாட்டையுமே பேதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  இந்த துயரில் நாமும்  பங்கு கொள்வோமாக.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48