மலையக மக்களிற்காக பாராளுமன்றிலும் வெளியிலும் ஒலித்த குரல் மௌனித்துவிட்டது- சம்பந்தன் இரங்கல்

Published By: Digital Desk 3

27 May, 2020 | 02:26 PM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களிற்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது.

அமைச்சர் தொண்டமான் அவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் வழியில் மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவராவார்.

அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதிகளில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நன்மை கருதி அநேக வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவராகவும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்ட ஒரு மக்கள் தலைவராகவும் செயற்பட்டார்.

அன்னாரது மறைவானது மலையக மக்களிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களிற்கும் ஒரு பாரிய இழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் மறைவிற்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு தலைமைத்துவம் கொடுத்து மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவராக கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்கள்.

இந்த துயரமான சந்தர்ப்பதில் அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது கும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மலையக மக்களின் உயர்விற்கும் விடிவிற்க்கும் அன்னார் முன்னெடுத்த முயற்சிகளை அயராது தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் அம்மக்களின் உயர்வினை உறுதி செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். அன்னாரது ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்நிலையில், மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தொண்டமானின் இல்லத்திற்கு சென்ற சம்பந்தன் அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24