மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்

Published By: J.G.Stephan

27 May, 2020 | 10:47 AM
image

1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.

ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு, இ.தொ.காவில்  நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம்

தொண்டமான் இருந்த காலப்பகுதியில் என்னுடன் சேர்ந்து யாழ் மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும் மலையக வாழ் யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கான பல உதவி திட்டங்களையும் செய்தார்.

 கடந்த பெப்ரவரி 21ம் யாழ் வருகை தந்தபோதும் தெல்லிப்பளை பிரதேச செயலக பகுதியில் வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். யாழ் மக்களுக்காக வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து தருவதாக உறுதியளித்தார். அவரது பிரிவு என்னால் இன்னும் ஈடுஇணை செய்யமுடியாமல் உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 - அங்கஜன் இராமநாதன் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17