ரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம் : பொலிஸில் முறையிடத் தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 3

26 May, 2020 | 08:48 PM
image

(ஆர்.யசி)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. பெரும்பாலும் நாளைய தினம் முறைப்பாட்டை செய்யலாம் என  பேராசிரியர் ரதனஜீவன் ஹூல் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதங்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தனது பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் நாட்டில் சகலருக்கும் கொவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டாயமாக உள்ள போதிலும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அவற்றை கருத்தில் கொள்ளாது தனது மகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்தார் என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று காலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலில் இந்த விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.

தனக்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸில் முறைப்பாடொன்றை செய்யவும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறினார். தனக்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் ரீதியில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றதன பின்னணியில் ஒரு சிலர் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பது எனக்கு தெரியும். ஆகவே ஆணைக்குழு சார்பில் நாளைய தினம் பெரும்பாலும் பொலிஸில் முறைப்பாடொன்றை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44