மனித எச்சங்களை அகழும் பணி முகமாலையில் ஆரம்பம்

26 May, 2020 | 06:23 PM
image

முகமாலை பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்களை அகழும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சி பளை முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம்  திகதி கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழும் பணிகள் தற்போது கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணபராஜா  அவர்களின் முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.

கடந்த 22 ஆம் திகதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் பணியின் போது  மனித எச்சங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை துப்பாக்கி  கண்டுபிடிக்கப்பட்டன.   

அவர்கள் பளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணபவராஜா முகமாலை பகுதிக்குச் சென்று மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்களை  பார்வையிட்டதுடன் இன்றைய  தினம் 26ம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன்படி இன்று பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகிறது. இன்று (26) மாலை வரை மூன்று துப்பாக்கிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை என்பன காணப்பட்டுள்ளன.

இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரின் மனித எச்சங்களாக  இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்