சிறிகொத்தா ரணிலின் சொத்தல்ல - சஜித் தரப்பு போர்க் கொடி

26 May, 2020 | 06:20 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதா விக்கிரமசிங்கவினதும் - காரியவம்சவினதும் தனிபட்ட சொத்து கிடையாது அவர்கள் உரிமைக்கோருவதற்கு என்றும் அது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் சொத்து எனவும் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா,  பொதுத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிக் கொண்டதை அடுத்து ஐ.தே.க. வின் ஆதரவாளர்களே தங்களை சிறிகொதாவில் அமர்த்துவார்கள் எனவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாடுகளினால் மக்கள் அரசாங்கத்தின் மீது நமிபிக்கை இழந்துள்ளனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்துள்ளத. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக்க கட்சியி இ மக்கள் விடுதலை முன்னியினர்  வெற்றிக் கொள்ளும் அளவிலான வாக்குகளையாவது பெற்றுக் கொள்ளுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனே இணைந்துக் கொண்டுள்ளனர். ஆதவரவாளர்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கே பெருந்தொகையில் ஆதரவளிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக போலி பிரசாரங்களை தெரிவித்து வருகின்றனர்.

எமது தலைமையகம் மூடப்பட்டிருப்பதாகவும் இ இங்கு யாரும் இல்லை எனவும் போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் சிறிகொதா தலைமையகத்தை அவர்களது சொந்த சொத்தாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

அது அவர்களது தனிப்பட்ட சொத்து கிடையாது. அது ஐ.தே.க. ஆதரவாளர்களின் சொத்தாகும். இதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்பினர் படுந்தோல்வியை சந்தித்ததுடன் இ ஐ.தே.க. ஆதரவாளர்களே எம்மை அழைத்துச் சென்று சிறிகொதாவில் அமரச் செய்வார்கள். ஐ.தே.க. வுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஒன்றிணைவது தொடர்பில் சிக்கலில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22