கல்னெவ, வலஸ்வெவ பகுதியிலுள்ள 12 வயதுடைய சிறுமியொருவரின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி வீட்டிலுள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட முற்பட்ட 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெல்கொட, தெகதன்ன மற்றும் வெலிசர பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து டி 56 ரக துப்பாக்கி மற்றும் 51 துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தினை முன்னாள் இராணுவ கோப்ரல் ஒருவர் திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமி கல்னெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.