அந்திய செலாவணி இருப்பை பாதுகாக்க 1.1 பில்லியனை மோடியிடம் கோரிய ஜனாதிபதி

Published By: Digital Desk 3

25 May, 2020 | 06:58 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பாதிப்படைந்துள்ள இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை சீர்செய்ய இந்தியாவிடமிருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ( 8 ஆயிரத்து 360 கோடி ரூபா) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

இந்த தொகையானது ஏற்கனவே சார்க் மாநாட்டின் போது கோரப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான தொகையாகும்.  இதனை ஜனாதிபதி ஊடக பிரிவும் உறுதிப்படுத்தியது.

மேலும் குறித்த இலக்குகளை அடைய  கொழும்பு - இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து செயற்பட கூடிய பிரதிநிதியை நியமிக்குமாறும்  பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

கொவிட்-19 உலக வைரஸ் தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ள இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை சீர்செய்ய இந்தியாவிடமிருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ( 8 ஆயிரத்து 360 கோடி ரூபா) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

இலங்கையின்  கொரோனா தொற்று தாக்கம் குறித்து அறியவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி கோத்தாபயவுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடிய போதே குறித்த தொகையினை ஜனாதிபதி கோரியுள்ளார். 

இந்த கலந்துரையாடலின் போது இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் எதிர்கால கூட்டு முயற்சி திட்டங்கள் என்பவை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.  இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி இந்த கலந்துரையாடலின் போது உறுதியளித்தார்.

அதன் பிரகாரமே ஜனாதபதி கோத்தாபய ராஜபக்ஷ  8 ஆயிரத்து 360 கோடி ரூபாவை கோரியதாக இந்திய செய்திகளும் தகவல் வெளியிட்டுள்ளன.  அந்நிய செலாவணியின் கையிருப்பு படுமையாக சரிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்கும் வகையிலேயே இந்த நிதி உதவி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே சார்க் மாநாட்டின் போது கோரியிருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (3 ஆயிரத்து 40 கோடி ரூபா)  மேற்படியாகவே இந்த  தொகை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பத்துள்ளோம்.  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும். பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவது மற்றுமொரு நோக்கமாகும்.

இத்துறைகளில் முதலீடு செய்யுமாறு இந்திய வர்த்தகர்களையும் தற்போது இலங்கையிலிருக்கும் இந்திய கம்பனிகளையும் ஊக்குவிக்க முடியுமானால் அது கொரோனாவுக்கு பிந்திய காலப்பகுதியில் பொருளாதார புத்தெழுச்சிக்கு உதவியாக அமையும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார். 

இலங்கைகைகு ஒத்துழைப்பு வழங்க தனிப்பட்ட ரீதியிலும் மிக ஆர்வமாகவுள்ளோம். இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையிலாள நிபந்தணைகளுடன் ஒத்துழைப்புகளை வழங்க டில்லி தயாராகவே உள்ளது. எனவே குறித்த இலக்குகளை அடைய  கொழும்பு - இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து செயற்பட கூடிய பிரதிநிதியை தெரிவு செய்யுமாறு இதன் போது பிரதமர் மோடி கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00