கண்டி எசல பெரஹராக்களுக்கான 15 தொடக்கம் 20 வரையிலான யானைகள் பற்றாக்குறையாக இருப்பதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, 

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே கெமுனு வலியசுந்தர, வனவிலங்கு அமைச்சர் கமினி ஜயவிக்கிர பெரேராவிற்கு முடிந்தால் 5 யானைகள் தேடி தருமாறு சவால் விடுத்துள்ளார். 

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பெரஹராவுக்கென இணைக்கப்படவுள்ள யானைகள் தற்போதைக்குப் பெறப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில், 120 இலிருந்து 140 வரை காணப்படுவதாகத் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். 

பெரஹராவுக்கெனப் பயிற்றப்படும் மத்திய நிலையங்களில் 30 யானைகள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரித்தார்.