சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடுகளில் சந்தேகம் - ஜி.எல்.பீரிஸ்

25 May, 2020 | 05:55 PM
image

(இராஜதுரை ஹஷான் )

தேர்தல் ஆணைக்குழுவில் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தற்போது பொதுத்தேர்தலை நடத்துவது குறித்தே மக்கள் அவதானம் செலுத்துகிறார்கள். இதற்கன நடவடிக்கை யினை தேர்தல் ஆணைக்குழு முறையாக முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவில் முரண்பாடுகள் தீவிரமடைந்ததுள்ளன. சுயாதீன ஆணைக்குவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாக காணப்படுவதுடன், சந்தேகத்தினை தோற்றுவிப்பதாகவும் உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குவின் உறுப்பினர்கள் மாத்திரமே ஆணைக்குழுவின் வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் தவிர அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவருக்கு எதிராக ஏன் இதுவரையில் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

பொதுத்தேர்தலின் ஊடாக பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். தேர்தல் ஆணைக்குழு  தற்போதைய நிலையில் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தீர்மானங்களை எடுப்பதே சிறந்ததாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47