தான­மாக வழங்­கிய விந்­த­ணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்­தை­க­ளுக்கு தந்தை பிரித்­தா­னிய நபர் உரிமை கோரு­கிறார்

Published By: Robert

08 Dec, 2015 | 11:02 AM
image

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது விந்­த­ணுக்­களைத் தான­மாக வழங்­கி­யதன் மூலம் கடந்த இரு வருட காலப் பகு­தியில் 54 குழந்­தை­க­ளுக்கு தான் தந்­தை­யா­கி­யுள்­ள­தாக உரிமை கோரி­யுள்ளார்.

டெக்­கிலன் ரோனி (43 வயது) என்ற மேற்­படி நப­ருக்கு 4 வெவ்­வேறு பெண்கள் மூலம் சொந்­த­மாக 8 பிள்­ளைகள் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வருடம் தனது விந்­த­ணுக்­களைப் பெண்­க­ளுக்கு தான­மாக வழங்­கு­வ­தற்கு என இணை­யத்­தள பக்­கத்தை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து மட்டும் தான் இது­வரை 17 ஆண் குழந்­தை­க­ளுக்கும் 14 பெண் குழந்­தை­க­ளுக்கும் தந்­தை­யா­கி­யுள்­ள­தாக அவர் கூறினார்.

மேற்­படி குழந்­தை­க­ளுக்கு மேல­தி­க­மாக தன்­னிடம் விந்­த­ணுக்­களைத் தான­மாகப் பெற்ற மேலும் 15 பெண்கள் கர்ப்­ப­மா­க­வுள்­ள­தா­கவும் அவர்­களும் விரைவில் குழந்­தை­களைப் பிர­ச­விக்­க­வுள்­ள­தா­கவும் ரோனி தெரி­வித்தார்.

ரோனியின் இந்த அறி­விப்­பா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் பல தரப்­பி­னரும் அவ­ரது முறை­யற்ற செயற்­பாடு குறித்து கடும் கண்­ட­னத்தை தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் ரோனி விப­ரிக்­கையில், “ நான் இதனால் வெட்­க­ம­டை­ய­வில்லை. நான் பெண்­க­ளுக்கு தமக்­கென குடும்­பத்தை உரு­வாக்கிக் கொள்ள உதவி வரு­கிறேன்“ என்று கூறினார்.

தனது சேவை மூலம் 24 மணி நேரத்தில் 3 பெண்கள் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

“கருமுட்­டை­களை தானம் செய்யும் பெண்கள் புனி­தர்கள் போன்று நடத்­தப்­ப­டு­கின்­றனர். ஆனால் விந்­த­ணுக்­களைத் தானம் செய்யும் எம்மைப் போன்­ற­வர்கள் மோச­மான பையன்­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்­றனர்" எனத் தெரி­வித்த ரோனி, தான் பெண்­களின் குடும்ப பின்­னணி மற்றும் அவர்­களால் குழந்­தை­யொன்றை சிறப்­பாக வளர்க்க முடி­யுமா என்­பன தொடர்பில் தீவி­ர­மாக ஆராய்ந்த பின்­னரே விந்­தணு தான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­வ­தாக கூறினார்.

தான் மேற்­படி சேவையை வழங்­கு­வ­தற்­காக 200 மைல் தூரம் வரை பய­ணித்து வந்­துள்­ள­தாக தெரி­வித்­த ­அவர், தான் இதற்காக விந்தணுக்களைத் தானமாகப் பெறும் பெண்களிடம் பயணச் செலவையும் ஏனைய செலவுகளையும் மட்டுமே வசூலித்து வருவதாகவும் விந்த ணுக்களுக்கென தனிப்­பட்ட கட்டணங்கள் எதனையும் அற விடுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right