ரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்

Published By: J.G.Stephan

25 May, 2020 | 07:56 AM
image

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் இன்று காலை 5.50 மணியளவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல் -1206 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 181 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர். 

இன்று காலை 5.50 மணியளவில் குறித்த விமானம், 181 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.



இந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து இன்று அழைத்துவரப்பட்ட 181 பேரும் 2 ஆவது குழுவினர் என்பதுடன் ரஷ்யாவில் இருந்து 261 பேரடங்கிய முதலாவது குழுவினர் கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51