நாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி

Published By: J.G.Stephan

24 May, 2020 | 06:37 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் பொருளாதார திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிதி அமைச்சி எடுக்கின்றதா ? ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் எடுக்கப்படுகின்றதா  என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள இந்த விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பொறுப்புக் கூறவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிதி அமைச்சி எடுக்கின்றதா ? ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் எடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலத்தா அத்து கோரல இ இந்தவிவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பொறுப்புக்கூறவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்ச அதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதற்கென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டுவருகின்றார்.

அவரது செயற்பாடுகளினால் அவருக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் மாத்திரமின்றி அனைவரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.அரசியலமைப்பை மீறி செயற்படுவதனூடாக இவர் எதேச்ச அதிகாரமிக்க ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு வரி பணத்தை அதிகரித்துள்ளனர். இதனால் சாதாரணமக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி தேசத்திற்கு உரையாற்றிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ டின் மீனுக்கும் இ பருப்புக்கும் சலுகை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தற்போது வரி அதிகரிப்பினால் அந்த பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க தன்னிடம் நிதி இல்லை என்று தெரிவித்துக் கொண்டு இ நெஞ்சாலைகளை அமைப்பதற்காகவும் இ பெருந்தெருக்கள் புணரமைப்புக்கும் மற்றும் விளையாட்டு அரங்கு அமைப்பதற்காகவும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடன்பெறுவது எவ்வாறு என்று சிந்தித்து வருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த வேலைத்திட்டங்கள் அவசியம் தானா? தற்போது அரச தரப்பு அமைச்சர்களே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதனையே பாடுப்பொருளாய் கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்பட மாட்டோம்.

நாட்டின் நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறுகின்றதா இல்லை ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் தலையீட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்படதா நிலையிலும் தொடர்ந்தும் நிதி ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்புக்கு புறம்பான செயற்பாடாகும்.இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே பொறுப்புக்  கூறவேண்டிய நிலைமை ஏற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41