சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பதில் இந்­தியா பூரண தயார்­நி­லை­யி­லேயே உள்­ளது. இலங்­கையின் இறுதி தீர்­மானம் தெரி­விக்­கப்­படும் நிலையில் உட­ன­டி­யாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்போம் என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஆகி­யோரின் சந்­திப்­பிலும் இந்த விடயம் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எனி னும் திரவ இயற்கை வாயுவும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என இலங்கை கூறு­வது சாத்­தி­ய­மற்ற விடயம் எனவும் இந்­திய மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­யது.

இந்­தி­யா­வுக்கு வஉ­டக சுற்­று­லாவை மேற்­கொண்­டுள்ள இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழுவை இந்­திய எரி­சக்தி மற்றும் அனல்மின் அமைச்சின் செய­லாளர் பி.கே.பூஜாரி சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்­கப்­ப­டு­வது தொடர்பில் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய இரண்டு நாடு­களின் ஆத­ரவும் உள்­ளது. திரு­கோ­ண­ம­லையின் சம்பூர் பகு­தியில் இவ்­வா­றான அனல்மின் நிலையம் ஒன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் இலங்­கையின் சூழ­லியல் சிக்­கல்கள் மற்றும் மக்­களின் பாது­காப்பு தொடர்­பிலும் கடந்த காலத்தில் இருந்து ஆரா­யப்­பட்டு வந்­துள்­ளது.

இந்­நி­லையில் இவ்­வாண்டு பெப்­ர­வரி மாதம் 16ஆம் திகதி இலங்­கையின் சுற்­றுச்­சூழல் மத்­திய அவ­தான நிலையம் எமக்கு அறிக்­கை­யொன்றை முன்­வைத்­தி­ருந்­தது. சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்­கப்­பட சாத­க­மான நிலை­மை­களை அதில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள போதிலும் சில நிபந்­த­னை­க­ளையும் அவர்கள் முன்­வைத்­துள்­ளனர். எனினும் இலங்கை தரப்பு முன்­வைத்­துள்ள நிபந்­த­னை­களை எம்மால் ஏற்­று­கொள்ள கூடிய வகை­யி­லேயே உள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பது தொடர்பில் இந்­தி­யாவின் பக்கம் இருந்த அனைத்து செயற்­பா­டு­களும் சரி­யாக நிறை­வ­டைந்­துள்­ளன. எனினும் இலங்­கையின் இறுதி தீர்­மானம் இன்னும் எமக்கு வராத கார­ணத்­தினால் நாம் அதற்­கான அனு­மதி கிடைக்கும் வரையில் காத்­தி­ருக்­கின்றோம். இலங்­கையின் முடி­வுகள் எமக்குக் கிடைத்­த­வுடன் அடித்த 9 தொடக்கம் 12 மாதங்­க­ளுக்குள் சம்பூர் அனல் மின்­நி­லையம் அமைப்­பது தொடர்­பி­லான உரிய நிறு­வ­னங்­க­ளுக்­கான விலை­ம­னுக்­கோரல் விடப்­படும். அதன் பின்னர் அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்­டு­க­ளுக்குள் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி­களும் மேற்­கொள்­ளப்­படும் . மேலும் இந்த சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்­கப்­படும் நிலையில் 25ஆண்­டு­க­ளுக்கு அதற்­கான பயனை பெற்­றுக்­கொள்ள முடியும். அதன் பின்னர் மீளவும் புன­ர­மைக்­கப்­ப­ட­வேண்டும். எனினும் அமை­வையும் செயற்­பா­டு­க­ளையும் பொருத்து கால நீடிப்பு தொடர்பில் ஆராய வாய்ப்­புகள் உள்­ளன.

அதேபோல் கடந்த முறை இலங்­கையின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறே­சென மற்றும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி சந்­திப்­பின்­போது இந்த சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பக்­கப்­படும் நிலையில் அதற்­கான பாவ­னையில் திரவ இயற்கை எரி­வா­யுவை பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இதில் இந்­தி­யா­வுக்கு எந்த சிக்­கலும் இல்லை. எனினும் நிலக்­க­ரிக்கு பதி­லாக இயற்கை எரி­வாயு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது அதிகளவிலான செலவையும் காலத்தையும் எடுக்கும். இப்போது ஆரம்பிக்கப்பட திட்டம் இருக்குமாயின் இயற்கை திரவ எரிவாயுவை பயன்படுத்துவதாயின் இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதை விடவும் நிலக்கரியின் பாவனைகள் மிகவும் உகந்தது என்றார்.