நீர்க்கட்டணம் செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

22 May, 2020 | 12:13 PM
image

2020 பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துமாறு பாவனையாளர்களை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவனையை கணக்கிட முடியாது போனதால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க இன்று தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தலைமையில் இரத்மலானையிலுள்ள நீர்வழங்கல் வடிகலாமைப்புச் சபையின் தலைமை அலுவலகத்தில் இன்று (21.05.2020) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

நீருக்கான கட்டணங்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ நீர்பாவனை செய்யப்பட்டிருந்தால் இக் கட்டணங்கள் 06 மாத நீர்க்கட்டண கணக்கில் நிவர்த்தி செய்யப்படும். இதனால் தாமதக் கட்டணம் அறவிடப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

சபைக்கு மாதாந்தம் 4.5 பில்லியன் வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால் இம்மாதம் 1.35 பில்லியனே கிடைத்துள்ளது. 

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. நீர் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் 24 மணிநேரமும் 1939 என்ற இலக்க தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளலாம். 

அல்லது நீர் கட்டண பட்டியல் தொடர்பாக எதிர்காலத்தில ஈமெயில் ஊடாக நீர்கட்டண பட்டியலை பெற்றுக் கொள்ள உங்களது ஈமெயில் முகவரியை 0719399999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17