அனு­ரா­த­புரம் உள்­ளக அரங்கில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற 9 மாகா­ணங்கள் பங்கு பற்­றிய 41 ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் ஆண்­க­ளுக்­கான தேசிய கராத்தே போட்­டியில் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த எஸ்.பால்ராஜ் காட்டா பிரிவில் வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும்,75 கிலோ கிராம் குமிட்டி பிரிவில் சம்பத் வெண்­க­லப்­ப­தக்­கத்­தையும் பெற்­றுள்­ளனர்.

வட­மத்­திய மாகாண விளை­யாட்­டுத்­துறை பணிப்­பாளர் தலை­மையில் நடை­பெற்ற தேசிய கராத்தேப் போட்­டியில் இலங்­கையின் 9 மாகா­ணங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வீரர்கள் கலந்து கொண்­டனர்.

கராத்தேப் போட்­டியில் கிழக்கு மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி எஸ்.பால்ராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு தங்­கப்­ப­தக்­கத்­தினைப் பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இம்­முறை பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் பால்­ரா­ஜிற்கு வெள்­ளிப்­ப­தக்கம் கிடைத்­துள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரர்­க­ளுமே தேசியப் போட்­டியில் வெற்றி பெற்று பதக்­கங்­களைப் பெற்­றுள்­ளனர்.

இப்­போட்டி நிகழ்ச்­சிக்கு பிர­தம அதி­தி­யாக வட­மத்­திய மாகாண விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்­க­ளுக்­கான பதக்­கங்­களை அணி­வித்தார்.