யாழில் வீசிய பலத்த காற்றினால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிப்பு

Published By: J.G.Stephan

21 May, 2020 | 08:36 PM
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

தற்போது நிலவி வருகின்ற அம்பான் புயல் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது கடந்த 24 மணி நேரத்திற்குள் உயர்வானதாக உணரப்பட்டுள்ளது.


நேற்று வீசிய காற்றின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது. மேலும் மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஒரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கரை சேர்ந்துள்ளார்.

இந்த காலநிலையானது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எதிர்பார்ப்பதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

நிலப்பகுதியில் காணப்படுகின்ற காற்றின்  தாக்கத்தினை  விட கடற்கரையை அண்டிய  பகுதியில் காற்றின் வேகம் கூடுதலாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், மீனவர்கள்  கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02