எதிர்த்தரப்பினர் மீது சேறுபூசுதலை விடுத்து நாட்டை முன்னேற்றுவதில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் : ஹரீன்

Published By: J.G.Stephan

21 May, 2020 | 07:43 PM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கம் தற்போதுள்ள நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதை கவனத்திற் கொள்ளாது, எதிர்தரப்பு அரசியல்வாதிகள் மீது திட்டமிட்ட சேறுபூசல்களை முன்னெடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ,  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக வாக்களித்த மக்கள் அரசாங்கத்திடம் இதனை எதிர்பார்க்க வில்லை என்றும், தற்போதுள்ள நெருக்கடியில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் மீது சேறுபூசல்களை மேற்கொள்வதை பார்க்கிலும் நாட்டை முன்னேற்றுவது தொடர்பிலே அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.


அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதை அடுத்து நாங்கள் தெரிவித்துவந்த எதுவுமே பிழைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வந்த போதிலும் அரசாங்கம் தேர்தலை நடத்தும் எண்ணத்தில் நாட்டை திறந்துவைத்திருந்தமையினால் இன்று வைரஸ் பரவலினால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் வைரஸ் பரவலிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்வதை விட எதிர்கட்சி உறுப்பினர்களை அடக்கி வைப்பதே மிக முக்கிய செயற்பாடாகியுள்ளது.

அரசாங்கம் தங்களுக்கு சார்பான சில ஒப்பந்தக்கார்கள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் சிறந்த பேச்சாற்றல் மிக்க உறுப்பினர்களை சிறைப்பிடித்து அவர்களை அடைத்து வைத்துவிட்டு,  தங்களது இஷ்டம்போல் செயற்படுவதற்கு முயற்சிக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காணொளிகளை கொண்டு அரசாங்கத்திற்கு துணைப்போகும் சில சதிக்காரர்கள் ஊடாக அந்த காணொளிகளை மீள் திருத்தம் செய்து, அதில் அவர்கள் அடக்கிவைக்க எண்ணியிருக்கும் எதிபார்த்திருக்கும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளை தொடர்புபடுத்தி,  எதிர்தரப்பு உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எம்முடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில்  உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதன் உண்மை சம்பவம் தொடர்பில்  மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் இந்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். பொலிஸார் மீது எமக்கு பெரும் மதிப்பு உள்ளது. அவர்கள் அரசாங்கத்திற்கு துணைப்போகாமல் நியாயமானமுறையில் இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எதிர்தரப்பு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்கைமுறையோ, தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலோ பேசித்திறிவதற்கான காலமல்ல இது, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீண்டெழச் செய்வதே முக்கியமான செயற்பாடாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39