சர்வதேச நீதிபதிகள்  விவகாரத்துக்கு நாளை பதிலளிக்கவுள்ள அரசாங்கம் 

Published By: Priyatharshan

28 Jun, 2016 | 03:59 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை  புதன்கிழமை  இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. 

இதன்போது  ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட்  அல் ஹுசேன் தனது அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டதும் இலங்கை  தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். 

அதன் பின்னர்  மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை  தொடர்பான தமது   கருத்துக்களையும் யோசனைகளையும் வெளியிடவுள்ளன.  அதன் பின்னர் இலங்கையின் சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர   மனித உரிமை பேரவையில் உரையாற்றவுள்ளார். 

இதன்போது   ஏற்கனவே  உத்தியோகபூர்வபற்றற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள  ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

அதாவது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம்  ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக  இலங்கை அரசாங்கம்  எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது என்பது  தொடர்பாகவே   ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை    வெளியிடவுள்ளார். 

எனினும் அந்த அறிக்கை நேற்றைய தினம் உத்தியோகபூர்வபற்றற்ற முறையில்  வெளியிடப்பட்டுள்ளது.  

கடந்த வருடம் 30 ஆவது கூட்டத் தொடரில்  அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 18 ஆவது பரிந்துரையானது இவ்வாறு வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.   

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை  முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையில்   அரசாங்கமும்    இதனை முழுயைமாக அமுல்படுத்த தயார் என  கூறிவருகின்றது.  

அந்தவகையில்   இன்றைய தினம் அரசாங்கம்  உள்ளக விசாரணை பொறிமுறையில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றங்கள்  தொடர்பில்    ஜெனிவா மனித உரிமை பேரவையில்  உரையாற்றுவார். 

கடந்த 13 ஆம் திகதி  திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை  நடைபெறவுள்ளது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01