ஜனாதிபதி விரும்பாமையினால் நீதிமன்றமே நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் - ரணில்

Published By: Digital Desk 3

20 May, 2020 | 05:17 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்து தற்போதைக்கு தீர்மானிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கவும் நாட்கள் செல்லும். ஆனால் ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமாணி காலாவதியாகின்றது. இருந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி விரும்பாமையினால் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - 7, 5 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள இல்லத்தில் கட்சி உறுப்பினர்களை சந்தித்த போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்  , 

பொருளாதாரம் குறித்து திட்டமொன்னை வகுக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசணை வழங்கினேன். அவ்வாறு இல்லாது நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுச் செல்ல முடியாது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பலதுறைசார் வீழ்ச்சிகள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி புள்ளியிலேயே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்.

அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணி இனி கிடைக்கப்போவதில்லை. மறுப்புறம் அவர்களுக்கு உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உள் நாட்டிலும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை குறைத்து வருகின்றது.

ஆகவே பாரியதொரு சவால் நாட்டின் முன்னுள்ளது. உரிய திட்டமொன்றை வகுக்காது முன்னோக்கி செல்ல முடியாது என்பதனை அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளேன்.

தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரே கட்சி என்ற வகையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். பாரிய கூட்டங்களை நடத்த இயலாது. ஆனால் மக்களுக்கு தகவல்களை கொண்டு செல்ல புதிய முறைகளை கையாள வேண்டும். வைரஸ் பிரச்சினை முடிந்து விட்டதாக அரசாங்கம் காண்பிக்க முற்பட்டாலும் சுகாதார துறை உறுதியாக கூறவில்லை. 

எனவே தேர்தல் எப்போது என்பதனை தற்போது கூற இயலாது. உயர் நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும். வழக்கு முடிவடைந்த பின்னர் 35 நாட்கள் தருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.

இராணுவ வெற்றி நிகழ்வு ஒத்திகைளில் கலந்துக்கொண்ட இரு இராணுவ வீரர்களுக்கும்  கொரோனா வைரஸ் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் குறித்த உறுதியான திகதியை குறிப்பிட இயலாது. 

உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்க நாட்கள் செல்லும். ஆனால் ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமாணி காலாவதியாகின்றது. இருந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி விரும்பாமையினால் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46