ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் மேற்கத்தைய நாடுகளிற்கும் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் அரசாங்கம் தாரைவார்த்துவிட்டது என குற்றம்சாட்டும் பொது எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் மஹிந்த அணி ஆதரவு எம்.பியுமான தினேஷ் குணவர்த்தன, 

இன்றைய "அரசுக்கு" சொந்தக் காலில் நிற்பதற்கு திராணியில்லை என்றும் தெரிவித்தார். 

கடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தின் போது அவர்களது  தேவைகளுக்காகவும், மேற்கத்தைய நாடுகளின் தேவைக்காகவும் அரசாங்கம் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. 

உலகில் எத்தனையோ நாடுகள் தமது நாடுகளின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொண்டு ஐ.நா.வுக்கோ மேற்கத்தைய நாடுகளுக்கோ அடிபணியாது செயற்படுகின்றது. ஏன் நமக்கு அவ்வாறு செயற்பட முடியாது. 

எனவே இம்முறையும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அரசாங்கம் கீழ்பணியும் என்றும் தினேஷ் குணவர்த்தன எம்.பி தெரிவித்தார்.