கொரோனா சமூக பரவலாக மாறுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம் என்கிறார் சுகாதாரப் பணிப்பாளர்

20 May, 2020 | 05:08 PM
image

(ஆர்.யசி)

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தாலும் கூட தொற்றுநோய் சமூக பரவலாக மாறவில்லை. கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த நிகழ்கால தன்மைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொவிட் -19 தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது என்ற போதிலும் கூட சமூக தொற்றுநோய் பரவல் குறித்த எந்த அச்சமும் இல்லை. தொற்றுநோயாளர்கள் என கண்டறியப்பட்டுள்ள அனைவரும் கடற்படையினர் மட்டுமேயாகும்.

ஆகவே அவர்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் உள்ள காரணத்தினால் கொவிட் -19 தொற்றுநோய் தாக்கமானது  சமூக பரவலாக மாறும் என்ற அச்சம் கொள்ளாத்தேவையில்லை. ஆகவே கடற்படையினரின் இந்த சம்பவங்கள் தவிர்ந்து வேறெந்த விதத்திலும் பரவாத வகையில் இலங்கையில் கொவிட் -19 தொற்றுப்பரவல் கட்டுப்பாடில் உள்ளது.  

கடற்படையினர் கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் மூலமாக சமூக பரவல் ஏற்படாத வகையிலும், கடற்படையினரை விரைவாக குணப்படுத்தவும், பாதுகாப்பு படைகளுக்குள் இந்த தாக்கம் ஊடுருவாத வகையிலும் பார்த்துக்கொள்ள விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளை கடற்படையினருக்கு அறிவுறுத்தி வருகின்றோம். அவற்றை முறையாக பின்பற்றுவர்கள் என நம்புகின்றோம்.

அதேபோல் பாதுகாப்பு படையிரையும் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குள் உற்படுத்தி அவர்களை பரிசோதித்து  வருகின்றோம். ஒவ்வொரு  நாளும் ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு படையினரின் பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் இலங்கையர்களை பரிசோதிக்கவும் வேண்டியுள்ள காரணத்தினால் இந்த வாரம் தொடக்கம் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கும்.

எவ்வாறு இருப்பினும் ஹோட்டல்கள், நிகழ்வுகளை நடத்தும் மண்டபங்களை மீண்டும் ஆரம்பிக்க  இப்போது வாய்ப்புகள் இல்லை . சகல பகுதிகளையும் தொற்றுநீக்கள் செய்ய வேண்டும். குறிப்பாக கொழும்பில் சன நெரிசல்கள் உள்ள காரணத்தினால் ஹோட்டல்களை மீண்டும் ஆரம்பிக்க  சற்று தாமதமாகும். எனினும் உணவுகளை வீடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படும் ஹோட்டல்களை நடத்த முடியும். எனினும் ஹோட்டல்களில் இருந்து உணவு உட்கொள்ள அனுமதிக்க முடியாதுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08