நேர்காணலில் அளித்த பதில் முன்னரே திட்டமிடப்பட்டதல்ல - ஆறுமுகனின் முறைப்பாடு குறித்து பொலிஸ் தலைமையகம்

Published By: Digital Desk 3

20 May, 2020 | 02:54 PM
image

(ந.தனுஜா)

வானொலி அலைவரிசை நேர்காணலொன்றில் எஸ்.எஸ்.பி நவாஸ் அளித்த பதில் முன்னரே திட்டமிடப்பட்டதல்ல எனவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பிரதிப் பொலிஸ்மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சுப்ரின்டென்ட் நவாஸ் மீதான முறைப்பாட்டிற்குரிய விளக்கம் என்ற தலைப்பில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பிரதிப் பொலிஸ்மாதிபர் அஜித் ரோஹண கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இது கடந்த 3 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பொலிஸ் மேற்கொள்ளப்பட்ட  சுப்ரின்டென்ட் நவாஸ் மீதான முறைப்பாடுக்கான பதில் கடிதம் என்பதுடன், இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மாதிபர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

உங்களுடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், குறித்த விடயம் கடந்த மாதம் 2 ஆம் திகதி வானொலி அலைவரிசை ஒன்றில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியொன்றில் நவாஸ் வெளியிட்ட கருத்து தொடர்பானதாக அமைந்துள்ளது.

அந்த வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்  நவாஸிடம் கொழும்பிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றோர் குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் கையாளப்பட முடியாத ஒரு விதத்தில் பதிலளித்தார். எனினும் இது முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல.

இவ்விடயம் தொடர்பில் நவாஸ் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், நாம் இதுகுறித்து மன்னிப்புக்கோருகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16