உலகளவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் ; அமெரிக்காவில் 92 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை

Published By: Vishnu

20 May, 2020 | 01:44 PM
image

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தற்போது 49 இலட்சத்தையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

அதன்படி 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 4,900,253 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அதனால் 323,345 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 1,689,377 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுள்: 

  • அமெரிக்கா: 1,528,566 
  • ரஷ்யா: 299,941 
  • பிரேஸில்: 271,885 
  • பிரிட்டன்: 250,138 
  • ஸ்பெய்ன்: 232,037 
  • இத்தாலி: 226,699 
  • பிரான்ஸ்: 180,933 
  • ஜேர்மன்: 177,778 
  • துருக்கி: 151,615 
  • ஈரான்: 124,603 
  • இந்தியா: 106,886 
  • பேரு: 99,483 
  • சீனா: 84,063 
  • கனடா: 80,498 
  • சவுதி அரேபியா: 59,854 
  • பெல்ஜியம்: 55,791 
  • மெக்ஸிகோ: 54,346 

கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:

  • அமெரிக்கா: 91,921 
  • பிரிட்டன்: 35,422 
  • இத்தாலி: 32,169 
  • பிரான்ஸ்: 28,025 
  • ஸ்பெய்ன்: 27,778 
  • பிரேஸில்: 17,983 
  • பெல்ஜியம்: 9,108 
  • ஜேர்மன்: 8,081 
  • ஈரான்: 7,119 
  • கனடா: 6,028 
  • நெதர்லாந்து: 5,734
  • மெக்ஸிகோ: 5,666 
  • சீனா: 4,638 
  • துருக்கி: 4,199 
  • சுவீடன்: 3,743 
  • இந்தியா: 3,303 
  • பேரு: 2,914 
  • எகுவாடோர்: 2,839 
  • ரஷ்யா: 2,837 

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் ஆரம்பமானதிலிருந்து ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று அந் நாட்டு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது 106,886 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,303 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் 42,309 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 37,136 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,325 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் இதுவரை 2.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று சோதனைகளை நாடு முழுவதும் நடத்தியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் செவ்வாய்க்கிழமை 31 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உட்டு உயிரிழப்புகளும் பதிவாகியுளள்ளன. 

இதன் மூலம் ஜப்பானின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 16,925 ஆகவும் உயிரிழப்பானது 784 ஆகவும் உயர்வடைந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியாக 10 ஆவது நாளாகவும் 30 க்கும் குறைவான புதிய கொரோனா தொற்றாளர்கள் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதன்படி கடந்த ஒரு மாதத்தில் படிப்படியாக ஜப்பானில் புதிய கொரோனா தொற்றாளர்கள் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. 

சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நாளாந்தம் 100 - 300 வரையான புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.

அமெரிக்கா

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை 20,260 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,574 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் மொத்தமாக 1,528,566 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி 91,921 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.

சீனா

சீனாவில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் கூறியுள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஐந்து புதிய கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் ஆவார். மற்றைய அனைவரும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள், வடகிழக்கு மாகாணமான ஜிலினில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் மொத்தமாக 84,063 கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 4,638 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 79,310 பேர் குணமடைந்தும் உள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47