மலையகத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பலர் பாதிப்பு

Published By: Digital Desk 3

19 May, 2020 | 08:05 PM
image

மலையகத்தின் பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.  இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் பல பகுதிகளும் ஹட்டன், நோர்வூட், நாவலப்பிட்டி  உள்ளிட்ட வேறு சில பிரதேசங்களும்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளும், சீரற்ற காலநிலையின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் தடைகளுக்கு மத்தியிலேயே வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றது.

கடும் பனிமூட்டம் நிலவுவதால் அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

அடை மழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மஸ்கெலியா சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளுக்கு வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட ஆலயமும் நீரில் மூழ்கியுள்ளது.

அதேபோல சாமிமலை பாக்ரோ தோட்டப்பகுதியில் வெள்ளத்தால் 12 குடும்பங்களும், கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும் தலவாக்கலை ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான உதவிகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவு விவசாயம் செய்யப்படுகின்றது. தொடர் மழையால் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டங்களுக்கு வெள்ளநீர் புகுந்துள்ளதால் உற்பத்திகள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55