அஸ்வன்ன கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ள மக்கள் வங்கி

19 May, 2020 | 06:19 PM
image

அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கமைய மீண்டும் தன்னிறைவு பெற்றதொரு நாட்டினை உருவாக்கிடும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வன்ன கடன் திட்டத்தின் மூலம் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதை ஆரம்பித்து வைத்திட கம்பஹ பிரதேசத்திலுள்ள தூனகஹ எனும் இடத்தில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் எம்.ஏ. பொனிபெஸ் சில்வா ஆகியோரின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. 

இங்கு வயல் நிலங்கள் கொள்வனவு செய்வதற்கு, பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான விதை மற்றும் மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, கால்நடை முகாமைத்துவம் போன்றவற்றுக்கு கடன் உதவித் தொகை வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக மக்கள் வங்கியின் அஸ்வன்ன சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்கினை ஆரம்பித்த விவசாயம், ஏனைய பயர்ச்செய்கைகள் மற்றும் கால்நடை வளங்களுடன் தொடர்புடைய தொழில்களில் இருப்போருக்கு வங்கிக் கணக்குப் புத்தகங்களும் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் (தனிநபர் மையப்படுத்தப்பட்ட வங்கி நடவடிக்கைகள்) கே.பீ. ராஜபக்ஷ, பிரதி பொது முகாமையாளர் (தனிநபர் மையப்படுத்தப்பட்ட வங்கி நடவடிக்கைகள்) ரேணுகா ஜயசிங்ஹ, பிரதி பொது முகாமையாளர் (விவசாய வங்கி நடவடிக்கைகள்) கிரிஷானி நாரங்கொட, உதவி பொது முகாமையாளர்(அபிவிருத்தி நிதி) யூ.எஸ். கர்டி, உதவி பொது முகாமையாளர் (சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள்) விக்கிரம நாராயண, உதவி பொது முகாமையாளர் (விற்பனை) ஏ.யூ.ஏ. அன்சார், கம்பஹ பிரதேச முகாமையாளர் நளின் பதிரகே ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய சங்க அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

அக்காலம் முதல் விவசாய பொருளாதாரத்தினூடாக கட்டியெழுப்பப்பட்ட இலங்கை சமூகத்தினுள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயம், கடற்றொழில் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுடன் கால்நடை வளங்களினூடாகவும் பெரும்பாலான மக்கள் குறிப்பிடத்தக்க  வருமானங்களைப் பெற்று வருகின்றனர். இப்பிரிவினர் இலங்கையின் பொருளாதாரத்துக்காக பெரும் பங்களிப்பை செய்து வருகின்றனர். இவ்வாறு அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இணையாக அவர்களுக்கு நிதியியல் ரீதியாக வலுவூட்டி, அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் நோக்கத்துடன் மக்கள் வங்கியின் அஸ்வன்ன கடன் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் நிலங்கள் கொள்வனவு செய்வதற்கு, பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான விதை மற்றும் மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகவும் அதற்கான படகுகளை கொள்வனவு செய்திடவும், கால்நடை முகாமைத்துவம் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு கடன் உதவித் தொகை வழங்கிட மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள அருகிலுள்ள மக்கள் வங்கிக்கிளை முகாமையாளரை நாடுங்கள்.

படம் 1: மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அஸ்வன்ன கடன் உதவித் திட்டத்தின் கீழ் கடன் தொகையொன்றினை கையளித்திடும் போது. மக்கள் வங்கியின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் எம்.ஏ. பொனிபெஸ் சில்வா, பிரதி பொது முகாமையாளர் (விவசாய வங்கி நடவடிக்கைகள்) கிரிஷானி நாரங்கொட ஆகியோர்.

படம் 2: மக்கள் வங்கியின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரிஃ பொது முகாமையாளர் எம்.ஏ. பொனிபெஸ் சில்வா, அஸ்வன்ன கடன் உதவித் திட்டத்தின் கீழ் கடன் தொகையொன்றினை கையளித்திடும் போது. மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பிரதி பொது முகாமையாளர் (விவசாய வங்கி நடவடிக்கைகள்) கிரிஷானி நாரங்கொட ஆகியோர்.

படம் 3: மக்கள் வங்கியின் அஸ்வன்ன கடன் உதவித் திட்டத்தின் கீழ் கடன் தொகையைப் பெற்றுக் கொண்ட சிலர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57