தண்டனையிலிருந்து தப்பித்தார் கிறிஸ் கெய்ல்

Published By: Digital Desk 3

19 May, 2020 | 05:04 PM
image

கரீபிரியன் பிரீமியர் லீக் டி 20 தொடரின் ஜமைக்கா தல்லாவாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் சர்வான் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய கிறிஸ் கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் ஒழுங்காற்று நடவடிக்கையிலிந்து இருந்து தப்பினார்.

ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடி வந்த கெய்ல், இம்முறை அவரை கழற்றி விட்டது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி வாங்கியது.  ஜமைக்கா அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு அவ்வணியின் உதவிப் பயிற்றுநரான ராம்நரேஷ் சர்வான்தான் முக்கிய காரணம் என்று கெய்ல் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் கெய்லை நீக்கியமை அணி உரிமையாளர்களின் முடிவே தவிர இதில் எனது பங்கு துளியும் கிடையாது என்று சர்வான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே குறிப்பிட்ட அணியுடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர் விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்கும், சி.பி.எல். கிரிக்கெட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய கெய்ல் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைத் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியிருந்தார்.

இந்நிலையில் 40 வயதான கிறிஸ் கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஜமைக்கா அணியிலிருந்து நான் நீக்கப்பட்டதன் உண்மை நிலவரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அந்த வீடியோவை வெளியிட்டேன்.

ஜமைக்கா அணியிலிருந்து நான் 2 ஆவது முறையாக விலக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய சி.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கையை ஜமைக்கா அணிக்காக, சபீனா பார்க் மைதானத்தில் என்னுடைய சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் முடித்துக் கொள்ள விரும்பினேன். ஏற்கனவே இரண்டு முறை எனது தலைமையில் ஜமைக்கா அணி பட்டம் வென்றுள்ளது.

அவர்கள் என்னை நடத்திய விதத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் உள்ளது. அந்த ‘வீடியோ’வில் நான் பேசிய வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறேன். அவை எனது இதயத்திலிருந்து வெளிப்பட்டவை. அதே நேரத்தில் எனது பேச்சின் சில பகுதிகள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்கும், சி.பி.எல். கிரிக்கெட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதை ஒப்புக் கொள்கிறேன்.

சி.பி.எல். கிரிக்கெட்டின் புகழுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த போட்டியின் மூலம் 7 ஆண்டுகளாக கரிபீயன் ரசிகர்கள் முன் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்று இருக்கிறேன். அதற்காக நன்றி. இந்த போட்டியில் உற்சாகமாக மட்டையை சுழட்டியதோடு மட்டுமின்றி அது வளரவும் உதவி இருக்கிறேன். இந்த ஆண்டு புதிய அணிக்காக களம் காண ஆர்வமுடன் உள்ளேன்’’ என்று கெய்ல் அதில் கூறியுள்ளார்.

கெய்ல் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் திருப்தியடைந்த சி.பி.எல். நிர்வாகம், ஒழுகாற்று நடவடிக்கைக் குழு அமைக்கத் தேவையில்லை என்று கூறி இத்துடன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் காரணமாக போட்டித் தடை அல்லது அபராதம் எதுவும் இல்லாம் கிறிஸ் கெய்ல் தப்பினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20