கொரோனா வைரஸ் தொற்று செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்

18 May, 2020 | 10:07 PM
image

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று செரிமான மண்டலத்தையும் பாதிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் விவரிக்கையில்,“ பொதுவாக எந்த வைரஸ் கிருமிகளும் மனிதர்களுடைய உடலுக்குள் சென்றால், அங்குள்ள ஆரோக்கியமான செல்களை அழிப்பதுடன், பல்கி பெருகவும் செய்யும்.  தற்போது புதிதாகத் தோன்றியிருக்கும் ‘கோவிட் 19’ என்ற வைரஸ் கிருமிகளும் சுவாசப் பாதை மற்றும் நுரையீரலை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

இது சுவாச பாதையை பாதித்தவுடன் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உருவாக்கி, சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய கோவிட் 19 வைரஸ் சுவாசப் பாதையை மட்டும் பாதிப்பதுடன் நில்லாமல், செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது.

குறிப்பாக ரத்தம் உறையாமையை ஏற்படுத்தி அஜீரண கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக நுரையீரலில் அல்வியோலர் டைப் 2 வகை செல்களை கோவிட் 19 வைரஸ்கள் பாதிக்கிறது.இதன் காரணமாக உணவுப்பாதை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றையும் பாதித்து, செரிமான மண்டலத்தின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் சீர்குலைக்கிறது.

‘கோவிட் 19’ வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தவர்களை ஆய்வு செய்த போது அவர்களின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் இவர்களுக்கு பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அடி வயிறு வலி என செரிமான மண்டலப் பாதிப்பிற்கான அறிகுறிகள் அனைத்தும் ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். அத்துடன் இது தொடர்பான ஆய்வு மேலும் தொடர்வதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்த பின்,செரிமான மண்டல பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வகைகயில் பெறவேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.  

-டொக்டர். ராஜன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29