சர்வதேசம் கோமாவில் இருந்து மீண்டு எமது மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்

18 May, 2020 | 05:41 PM
image

சர்வதேச சமூகம் கோமாவில் இருந்து மீள வேண்டும். எமது மக்களுக்கு ஒரு நீதியை பெற்றுகொடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை வாயிலில் இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போர் முடிந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும். இறுதிக்கட்ட போரிலே படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவருக்குமான நீதி இதுவரை கிடைக்கவில்லை. 

மாறாக நல்லாட்சி அரசும், தமிழ்மக்களின் பிரதிநிதிகளும்  தமிழ் மக்களுக்கான நீதியை மழுங்கடித்திருக்கின்றார்கள். 

அத்துடன் இராணுவத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பலர் இன்று சரணடைந்த நிலையில் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தமது உறவுகளுக்காக பலவருடங்களாக வீதிகளிலே இருந்து போராடுகின்றார்கள். 

எனவே சர்வதேச சமூகம் கோமாவில் இருந்து மீள வேண்டும். எமது மக்களுக்கு ஒரு நீதியை பெற்றுகொடுக்க வேண்டும்.

அத்துடன் இனப்படு கொலையை கண்டித்து அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு எடுத்து செல்வதற்கு தமிழ் தேசிய பரப்பிலே இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து நிரந்தரமான நீதியை பெறுவதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44