மீண்டும் ஆரம்பமாகியது மூதூர் படுகொலை தொடர்பான விசாரணை 

Published By: Priyatharshan

28 Jun, 2016 | 12:15 PM
image

திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

தற்போது ஜூரி சபை முன்னிலையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

யுத்த காலத்தில் குமாரபுரம் கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இந்த படுகொலைச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.

1996-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இரவில் இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள் , குழந்தைகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 39 பேர் காயமடைந்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக ஆரம்ப காலத்தில், மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது தெகியத்த இராணுவ முகாமில் கடமையாற்றிய எட்டு இராணு வீரர்கள், சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அக் காலத்தில் நிலவிய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் பாதுகாப்பு கருதி சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர்  பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைக்கு, சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ள போதிலும் 16 பேர் மட்டுமே சமுகமளித்திருந்தனர்.

ஏனைய, நான்கு பேரும் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் விசாரணையின் போது சாட்சியமளித்த பெண்ணொருவர், எதிரிகளில் ஒருவரே தனது கணவனை சுட்டுக் கொன்றவர் என அடையாளம் காட்டினார்.

எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில் ஏனைய ஆறு பேரும் அஜராகினர்.

தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த ஆறு இராணுவ வீரர்களும், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47