போர் நிறைவுற்ற போதும் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் ஓயவில்லை - ஜீ.எல்.பீரிஸ்

Published By: J.G.Stephan

18 May, 2020 | 04:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யுத்தம் நிறைவடைந்தாலும் விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள் நிறைவு பெறவில்லை. என்பதை ஒருபோதும் மறக்க முடியாது. இராணுவத்தினருக்கான உரிய கௌரவத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவு பெற்று இன்றுடன் 11 வருடம் பூர்த்தியாகின்றன. பல இழப்புகளுக்கு மத்தியிலே யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது.

யுத்தம் நிறைவு பெற்றுள்ளதே யுத்தத்துக்கான அடிப்படை நோக்கம் இல்லாதொழிக்கப்படவில்லை. விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட சர்வதேச அமைப்புக்கள் இன்றும் பிரிவினைவாத கொள்கையுடன் செயற்பட்டு  நாட்டுக்கு எதிரான அழுத்தங்களை பிரயோகிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராகவும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச அமைப்புகளுக்கு ஆதரவாகவும் செயற்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை இராணுவத்தினர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். மறுபுறம் புலனாய்வு பிரிவினர் அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தப்பட்டார்கள். இதன் தாக்கத்தை நாட்டு மக்களே அண்மையில் எதிர் கொண்டார்கள்.

தேசியத்தை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இராணுவத்தினரை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் வெற்றி பொதுத்தேர்தலின் வெற்றியின் ஊடாகவே முழுமைப் பெறும். ஜனாதிபதியின் கொள்கையினை செயற்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41