விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல - பிரதமர் மஹிந்த

18 May, 2020 | 03:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. அமெரிக்காவின் எப்.பி.ஐ நிறுவனத்தினால் மிக கொடிய தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட அமைப்புக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதனாலேயே தமிழ்  மக்கள் தற்போது நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றார்கள். ஜனநாயகத்துக்கு புறம்பான செயற்பாட்டை வெற்றிக்கொண்ட இராணுவம், பொலிஸார் கௌரவிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தத்தின் 11 ஆவது வருட வெற்றியினை நாளை (மே 19) கொண்டாடுகின்றோம்.

இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல .உலகில் மிக கொடிய தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம்.

விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதனால்  தமிழ் மக்கள் தற்போது நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கின்றார்கள்.

புலிகள் அமைப்பினால் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவதும் இல்லை, தமிழ் அரசியல்வாதிகள் இவர்களுக்கு அஞ்சி வாழ வேண்டியதும் இல்லை.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் தேர்தல் இடம்பெற்றது. மக்கள் ஜனநாயக ரீதியாக மக்களாணையினை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

யுத்தத்தை வெற்றிக்கொண்டு முழு உலகின் நன்மதிப்பை பெற்ற இராணுவத்தினர் இன்று கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு  எதிராக சுகாதார தரப்பினருடன் இணைந்து போராடுகின்றார்கள். இதன் வெற்றியும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

தீவிரவாத தாக்குதல், இயற்கை அழிவு மற்றும் வைரஸ் தாக்கம் ஆகியவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கும், பொஸிஸாருக்கும் உண்டு என்பதை இவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இராணுவத்தினரை மிலிட்டரி, சிவில் என நல்லாட்சி அரசாங்கத்தினர் வேறுபடுத்தியமை வெறுக்கத்தக்கது.

ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கு அரச பதவிகள் வழங்கப்படும் போது அவர்கள் மிலிட்டரிகார்ர் எனவும் ஓய்வு பெற்ற பின்னர் சாதாரண சிவில் தரப்பினர் என்றே கருதப்பட்டார்கள். இந்நிலைமை மாற வேண்டும் என்றே குறிப்பிட்டோம்.

அனைத்து பலத்தினையும் ஒன்றினைத்து  ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக  அரசாங்கத்தில் உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன.

ஜனநாயகத்துக்கு புறம்பான செயற்பாடுகளை வெற்றிகொண்டு மக்களாணையினை உறுதிப்படுத்த இராணுவத்தினரும், பொலிஸாரும் எந்நிலையிலும் செயற்படுவார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தேவைக்காக இராணுவத்தினரை காட்டிக் கொடுத்து அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தியது. இதனை ஒருபோதும் மறக்க முடியாது. அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட இராணுவத்தினருக்கு நியாயம் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44