விக்கியை தொடர்ந்த பொலிஸார் செம்மணியிலும் அஞ்சலிக்கு தடை

18 May, 2020 | 09:20 AM
image

சங்குப்பிட்டியில் இருந்து யாழ். நோக்கி திருப்பி அனுப்பப்பட்ட வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினார் செம்மணியில் அஞ்சலிக்காக சென்ற சமயம் அங்கும் அவர்களுக்கு தடை தடையேற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.செம்மணிப் பகுதியில் அஞ்செலி செலத்துவதற்காக முற்பட்டபோது அவர்களை பின்தொடர்ந்த பொலிஸார் அங்கும் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது திருப்பி அனுப்பியுள்ளனர்.

முன்னதாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர்.

இவ்வாறு சென்றுகொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டனர்.

விக்கினேஸ்வரன் உட்பட தமிழ் மக்கள் கூட்டணியின் சுமார் பத்துப் பேர் வெவ்வேறு வாகனங்களில் அங்கு சென்றுகொண்டிருந்தபோது இன்று காலை 6.30 மணியளவில் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்க வைக்கப்பட்ட பின்னர், அவர்களை மீண்டும் யாழ் நோக்கி திருப்பினுப்பியுள்ளனர்.

இவ்வாறு திரும்பி யாழ். நோக்கி செல்லும் போது அவர்கள் செம்மணிப் பகுதியில் அச்சலி செலுத்தும் முகமாக வாகனத்தை நிறுத்திய போது அங்கும் அவர்களுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38