டயலொக் சம்பியன் லீக் கால்ப்பந்தாட்ட போட்டித் தொடரின் திகாரிய இளைஞர் விளையாட்டுக்கழக அணியில் யாழ். அரியாலையைச் சேர்ந்த கால்ப்பந்தாட்ட வீரரான சன்சஜன் இடம்பிடித்துள்ளார்.

நடைபெற்றுவரும் டயலொக் சம்பியன் லீக் தொடரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரிவு 1 போட்டியொன்றில் திகாரிய இளைஞர் விளையாட்டுக்கழக அணியும்  ஜாவாலேன் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல்களைப் போட்ட நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

இதேவேளை, திகாரிய அணியில் மன்னாரைச் சேர்ந்த ரோயல் என்பவரும் நைஜீரிய வீரர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளார்.

யாழ். அரியாலையைச் சேரந்தவரும் யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனுமான சன்சஜன் கிரிக்கெட் வீரரென்பதும் குறிப்பிடத்தக்கது.