523 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி : மொத்த எண்ணிக்கை 970 ஆக உயர்வு

Published By: J.G.Stephan

17 May, 2020 | 09:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 523 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 964 தொற்றாளர்களில் 523 பேர் கடற்படையை சேர்ந்தவர்களாவர். இன்றிரவு 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 33 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது. 



இந்நிலையில் இன்று மற்றும் 18 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் இருந்து 7 பேரும், ஹோமாகம வைத்தியசாலையில் இருந்து 7 பேரும்,   கொழும்பு  கிழக்கு  ஆதார வைத்தியசாலையில் இருந்து ( முல்லேரியா வைத்தியசாலை ) மூவரும், இரணமடு வைத்தியசாலையில் இருந்து ஒருவரும் இவ்வாறு பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி இதுவரை 538 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் , அவர்களில் 183 பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 413 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கடந்த சில நாட்களாக கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதும் நேற்றைய தொற்று நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் பிரகாரம் குறிப்பிடத்தக்க அளவு அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி 209 பேர் கொரோனா சந்தேகத்தில்  29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31