பொதுமக்களுக்கான போக்குவரத்து அடுத்தவாரமே ! 19 புகையிரதங்கள், 4 ஆயிரம் பேருந்துகள் நாளை தொடக்கம் சேவையில் !

Published By: Digital Desk 3

17 May, 2020 | 08:44 PM
image

(ஆர்.யசி)

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பணிகளுக்காக 19 புகையிரதங்கள் மற்றும் நான்காயிரத்திற்கு அதிகமான பேருந்துகள் நாளைதொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

எனினும் பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாது எனவும் அடுத்த வாரமே பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் எனவும்  போக்குவரத்து அமைச்சு சேவைகள் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்துமே தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மேலும் அதிகரிக்க போக்குவரத்து சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இப்போது வரையில் 7 புகையிரதங்கள் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நாளை தொடக்கம் 19 புகையிரதங்கள் நாட்டில் சகல பகுதிகளில் இருந்தும் கொழும்பை வந்தடையும் வகையில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்த போக்குவரத்து சேவைகள் அனைத்துமே அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பணிகளை முன்னெடுக்க செய்துகொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மட்டுமேயென கூறும் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர, நாளை தொடக்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்போக்குவரத்து சேவைகளை வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்ட போதிலும் அடுத்த வாரம் வரையில் பொறுத்திருக்க வேண்டியுள்ளதாக கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோய் நிலைமைகள் மாற்றம் பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்ற நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் இந்த வாரம் முழுவதும் நிலைமைகளை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் தொடக்கம் அச்சுறுத்தல் இல்லையென கருதப்படும் பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் ஆனால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்தை முன்னெடுக்க இப்போது அனுமதிக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11