அரச நிதியை ஜனாதிபதி செலவழித்துவருவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் - ஹரிஸன்

Published By: Vishnu

17 May, 2020 | 05:20 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நிதி தொடர்பான பூரண அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஹரிஸன், அரசாங்கத்தின் நிதியை ஜனாதிபதி நினைத்த பிரகாரம் செலவழித்துவருவது தொடர்பாக பிரச்சினை ஏற்படும். அதேபோன்று அரசஅதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டிவரும் என்றும் கூறினார்.

தம்புள்ள பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாகவும் அரசாங்கத்தினர் எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் ஏன் இந்தளவு பயப்படவேண்டும் என கேட்கின்றேன்.

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கவில்லை என்றால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பாராளுமன்றம் தொடர்ந்து செயற்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இவர்கள் அச்சப்படுவது தொடர்பில் எமக்கும் சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டுக்கு நிவாரணமாக ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது. 

நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பாகவும் அதனை செலவிடும் நிதி தொடர்பாகவும் முறையாக பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதேபோன்று ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன மக்களின் நிதியாகும். அதனை பெற்றுக்கொள்வதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும். அரசாங்கத்தின் நிதி தொடர்பான பூரண அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது. ஆனால் இவர்கள் சட்டத்துக்கு முரணாக நிதியை செலவழித்து வருவதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38