தென் சீனக் கடல் வான்பரப்பில் அமெரிக்க சிறப்பு தாக்குதல் விமானங்கள்

17 May, 2020 | 03:06 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட்-19 உலக வைரஸ் தாக்குதலின் போது சீனாவினுடைய அணுகுமுறைகள் உலக நாடுகள் மத்தியில் சீன எதிர்ப்பு போக்கை கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக மேற்குல நாடுகளில் இந்த சீன எதிர்ப்பு அலைகளும் போக்கும் கடுமையாகியதாகவே உள்ளது .

முழு உலகையும் முடக்கியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்குள் மறைந்து தென் சீன கடலில் எண்ணை நிதியங்கள் மற்றும் இயற்கை வளங்களை குறிவைத்து சீனா முன்னெடுத்த நகர்வுகள் வெளிச்சத்திற்கு வரவே அந்த கடற்பகுதியில் அமையின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் சீன கடவை மையப்படுத்தி உலக அரசியலில்  சீனாவிற்கு எதிர்ப்பு நிலை இன்றளவில் கடுமையாகியுள்ளது.  

இவ்வாறானதொரு பதற்றமிக்க சூழலில் அமெரிக்கா முன்னாயத்தமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  பசுபிக் கடலில் மையம் கொண்டுள்ள படைகளை உஷார்ப்படுத்தியுள்ளதுடன் ஜப்பான் போன்ற நாடுகளின் விமான மற்றும் கடற்படைகளுடன் கூட்டு பயிற்சிகளையும் முன்னெடுத்துள்ளது. 

அந்த வகையில் பீ-1 எனப்படும் அமெரிக்க விமானப்படையின்  சிறப்பு படைப்பிரிவின் விமானங்கள்  தென்சீன கடல் வானில்  பறக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் இவ்வகையான விமானங்கள் வான் பரப்பிற்குள் வருவதனை உலக அரசியலில் சாதாரண விடயமாக கருதப்பட்டதில்லை . 

ஏதேனும் நாட்டிற்குரிய வான் பரப்பின் மேல் பீ-1  சிறப்பு தாக்குதல் விமானங்கள் பறக்கும் பட்டசத்தில் அதனை பாரியதொரு தாக்குதலுக்கான எச்சரிக்கையாகவே கருதப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டில் வட கொரிய வான் பரப்பிற்கு அருகில்  பீ-1 அமெரிக்க தாக்குதல் விமானங்கள் ஊடுருவிய நிலையில் அந்நாட்டில் காணப்பட்ட ஏவுகணை ஆய்வு மையங்களை மேலும் இரகசியமான இடங்களுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-ஹூங் மாற்றினார். எனவே குறித்த விமானங்கள் ஏதேனும் ஒரு நாட்டின் வான் பரப்பிற்கு அருகில் பறந்ததாக அறிந்தால் அண்மித்த நாடுகள் எச்சரிக்கை அடைந்து விடும் .

பசுபிக் கடற்பரப்பில் அமைந்துள்ள குவாம் என்ற தீவில் அமெரிக்க சிறப்பு தாக்குதல் விமானங்களை கொண்ட பீ-1 படைப்பிரிவின் முகாம்  அமைந்துள்ளது. ஆனால் இது தலைமை முகாம் அல்ல. அமெரிக்காவின் டெக்ஸஸ் மற்றும் டொகோடாவின்  தென் பகுதியிலுமே பீ-1 சிறப்பு படைப்பிரிவின் தலைமை முகாம்கள் அமைந்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த சிறப்பு படைப்பிரிவிக்குறிய அனைத்து விமானங்களையும் குவாம் தீவிலிருந்து  தலைமை முகாமிற்கு செல்லுமாறு பென்டகன்   கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னரே குவாம் தீவிலிருந்து பீ-1 விமானங்கள் அமெரிக்க தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறைசார் சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

சுனாமிற்கு முன்னர் கடல் அமைதியாக பின்வாங்கியது போன்று  இவ்வாறு மீளழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. மிக இரகசியமான நடவடிக்கை ஒன்றுக்காகவே மீளழைக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து பல்வேறு கோணங்களில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும் அவற்றில் தென் சீன கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை முக்கியமானதாக நோக்கப்படுகின்றது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் முழு உலகமும் பெரும் நெருக்கடிகளை சந்திக்கையில் ,சீனா மலேசிய கடற்பரப்பில் எண்ணை நிதியங்களை தேடி ஆய்வுகளை ஆரம்பித்தது. அது மாத்திரமன்றி  மலேசியா , வியட்நாம் ,  தாய்வான் , பிலிப்பைன்ஸ் மற்றும்  புறுனி  ஆகிய 5 நாடுகள் உரிமை கோரும் சர்ச்சைக்குறிய இந்த கடற்பரப்பிற்குள் அமைந்துள்ள இரு தீவுகளை , சீனா தனது மாநிலங்களாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தென் சீன கடலில் ஏற்கனவே இருந்த பதற்ற நிலையை அதிகரிக்கவும் வழிவகுத்தது. 

மறுப்புறம் தென் சீன கடலுக்கு அண்மித்த பசுபிக் வலயத்தில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்காவின் போர் கப்பலான யூஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற கப்பலை அங்கிருந்து அகற்றுவதற்காக திட்டமிட்டு கொவிட்-19 வைரஸ் பரப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தென் சீன கடலில் தமது ஆக்கிரமிப்புகளை தொடரும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகளை  சீனா முன்னெடுப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆனால் அவ்வாறு திட்டமிடப்பட்டு செயற்பட்டாலும் அதற்கான வாய்ப்புகளை வழங்காது அமெரிக்கா இரு போர்கப்பல்களை தென் சீன கடலுக்கு அனுப்பியது. மேலும் ஜப்பான் , மலேசியா , தென் கொரியா , வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்களும் சீனா ஆக்கிரமிப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்து அமெரிக்க போர்கப்பல்களுக்கு துணையாக அப்பகுதியில் நங்கூரமிடப்பட்டது. 

உலக வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தென் சீன கடலில் இவ்வாறனதொரு எதிர்ப்பை சீனா எதிர்பார்க்கவில்லை. ஆனால் தமக்கு எதிராக தென் சீன கடலில் ஏற்பட்டுள்ள சவாலை அவதானத்தில் கொண்டு அதற்கு எதிரான நிலைப்பாட்டையும் போரியல் ஆளுமையையும் வெளிப்படுத்தும் வகையில் சீனா , தனது  கிழக்கு ஆய்வு வலயத்தில் டீஎப்-26 ரக ஏவுகனைகள்  ஏவி சோதனையிட்டுள்ளது. 

தென் சீன கடலிலிருந்து அமெரிக்காவின் போர் கப்பல்களையும் நடவடிக்கைகளையும்  அகற்ற வேண்டும் என்பதே சீனாவின் ஒரே இலக்காக உள்ளது. அப்போது தான் தனது ஆக்கிரமிப்பை முழுமையாக அந்த கடலில் முன்னெடுக்க முடியும். இதனை நன்குணர்ந்த அமெரிக்க மீண்டும்   குவாம் தீவிக்கு பீ-1 சிறப்பு விமான தாக்குதல் படையணியை  சுமார் 200 வீரர்களுடன்  அனுப்பி வைத்துள்ளது. குவாம் தீவுக்கு திரும்பிய பீ-1 விமானங்கள்  ஜப்பானுடன் கூட்டு பயிற்சியிலும் ஈடுப்பட்டுள்ளது. 

மறுப்புறம்  தென் சீன கடலில் பீ-1 விமானங்கள் சுமார் 32 மணித்தியாலம்  கூட்டாக பறந்துள்ளன என்பதை  அமெரிக்க கடற்படையின் இந்து-பசுபிக் கட்டளை தலையகம் உறுதி செய்தது. ஆனால் இது குறித்து சீனா இதுவரையில் எவ்வித கருத்தினையும் முன்வைக்க வில்லை .

தென் சீன கடலில் மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் சீனாவின் நகர்வுகள் குறித்து  மிக கூர்மையாக அமெரிக்கா அவதானித்து வருகின்றது. ஆகவே தென் சீன கடலை மையப்படுத்தி பாரியதொரு நெருக்கடி சீனாவிற்கு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் விடயத்தில் சீனாவின் பதிலளிப்புகளை ஏற்காத அமெரிக்க ஏதேனும் வகையில் பதிலடி கொடுத்து விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.  இன்றளவிலும் வைரஸ் தாக்கத்தினால் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள அமெரிக்காவின் சீனா மீதான பகையுணர்வு நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. இதனை வெளிபபடுத்தும் வகையிலேயே வைரஸ் தாக்கத்தின் உயிரிழப்புகளை சீனாவிடம் கேட்குமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்து சென்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22