திடீரென தீ பற்றிய வியாபார நிலையம் : பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

Published By: J.G.Stephan

17 May, 2020 | 08:57 AM
image

வவுனியா சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்று நேற்றிரவு தீ பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா காத்தார் சின்னக்குளம்  வீட்டுத்திட்டம் திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்றிரவு 8  மணியளவில் திடீரென தீப்பற்றியெரிந்துள்ளது.



இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வர்த்தக நிலையம் நேற்றிரவு மூடப்பட்டிருந்த நிலையில் இரவு 8மணியளவில் மூடப்பட்ட கடையிலிருந்து புகை  வெளிக்கிளம்பியுள்ளது.


அதனை அவதானித்த சிலர் தீயை அணைக்க முற்பட்டதுடன் நகரசபையின் தீயணைப்பு பிரவினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 

எனினும், கடை முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததனால் கடையினுள் இருந்த சுமார் பத்து லட்சம் பெறுமதியான பொருட்கள்  தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மின் ஒழுக்கினாலே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37