ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த நபரொருவரை பேலியாகொடை குற்றவியல் விசாரணை பிரவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை களனி சுற்றவட்டப்பாதைக்கு அருகில் வைத்து குற்றவியல் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதான வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை இன்று (28) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.