ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு !

Published By: J.G.Stephan

16 May, 2020 | 06:03 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். அதேவேளை நாடளாவிய ரீதியில் இன்று (16.05.2020 ) இரவு 8 மணிமுதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை (18.05.2020) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.



 

அதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது :

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும்  ஊரடங்கு  சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 ஆம் திகதி திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைத்திட்டம் இன்று சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு, 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08