ஐ.நா.பாதுகாப்புச் சபை பயங்கரவாத்தடைக் குழு தயாரித்துள்ள வழிகாட்டியில் இலங்கையும் உள்ளடக்கம்

Published By: J.G.Stephan

16 May, 2020 | 04:56 PM
image

(ந.தனுஜா)

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இலங்கை உள்ளிட்ட சார்க் அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கி, ஒரு வழிகாட்டியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத்தடைக் குழு தயாரித்து வருகிறது.



இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சுதந்திரம், நியாயத்துவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அறிவு என்பன முறையானதொரு நீதித்துறைக்கு, குறிப்பாக தீவிரவாதம் சார்ந்த வழக்குகளில் மிகவும்  அவசியமானவையாகும். எனினும் பல நாடுகள் இவ்விடயத்தில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

இச்சவால்களுக்குத் தீர்வினை வழங்கும் விதமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத் தடைக் குழு சார்க் நாடுகளின் பணியாற்றும் நீதிபதிகளின் பங்களிப்புடன், 'நீதிபதிகளிக்கான தெற்காசியப் பிராந்திய வழிகாட்டிகளை' தயாரித்திருக்கிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும்  மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ஜேர்மனிய  தூதுவர் ஜோன் ரொஹ்டே, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெற வேண்டும். இக்காரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும் திட்டத்தை ஆதரிக்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50