அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையக அலுவலகத்தின் தலைமையில், தமிழகத்தின் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 36 பேர் இன்று இலங்கை திரும்பவுள்ளனர்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. 

இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்படுவதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.  

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 4799 இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.