இஸ்ரேலின் புதிய நில விஸ்தரிப்புத் திட்டத்தை அங்கீகரித்த அமெரிக்கா ! திகைப்பில் அரபு நாடுகள் 

16 May, 2020 | 01:32 PM
image

- லியோ நிரோஷ தர்ஷன்

2020 ஆம் ஆண்டு உலகில்  பெரும் மாற்றங்களுக்கு கொவிட்-19 வைரஸ் வித்திட்டுள்ளது. உலக பொருளாதாரம் , அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியல் என்பவற்றில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் உலகில் இடம்பெறக் கூடிய போர்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் கொவிட்-19 தடையாக இருக்கவில்லை.  அந்த வகையில் அமெரிக்கா எந்தளவு உலக நாடுகள் மத்தியில் பேசப்படுகின்றதோ அதே அளவிற்கு இஸ்ரேல் குறித்தும் பேசப்படுவது உண்டு. கடந்த 13 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம்  அரபு நாடுகளின் அவதானத்திற்கு உட்பட்டதாகியிருந்தது. 

ஏனெனில் இஸ்ரேலின் மேற்கு கரையை இணைக்கும் திட்டத்தை கண்காணிப்பதாகவும் புதிய கூட்டாட்சியின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துக்கொள்வதுமாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளரின் விஜயம் அமைந்திருந்தது.  எவ்வாறாயினும் கொவிட் -19 பின்னரான அமெரிக்காவின் போக்கு சற்று கடுமையாகியுள்ளது. சீனாவுடனான பொருளாதார பகையை தீர்த்து விட வேண்டும் என்பதில் கடும் போக்குடனேயே உள்ளது. 

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் உலக நாடுகளில் இடம்பெறுகின்ற போர்களை நிறுத்துவதற்கான யோசணை முன் வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா குறித்த யோசனையை நிராகரித்தது. அது மாத்திரமன்றி கொரோனா வைரஸ் சீனா மற்றும் உலக  சுகாதார ஸ்தாபனத்தினாலேயே உலக நாடுகளுக்கு பரவியது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படுமாயின் பாதுகாப்பு சபையின் யோசனைக்கு ஆதரவு  அளிப்போம்.  அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில்  அமெரிக்க பாதுகாப்பு சபை யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்காது வெளியேறியது. கொவிட்-19 வைரஸ் முழு உலகையும் முடக்கினாலும்   மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுகின்ற போர் தொடரும் என்பதே இதன் சுருக்கமான பதிலாகும். 

மத்திய கிழக்கு போர் நிலைமைகளை இதன் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். பாலஸ்தீனம் , ஈரான், ஈராக் ஆகிய நாடுகளின் பொதுவான எதிரி யாரென்றால் அது இஸ்ரேல் தான். அரபு நாடுகளின் பொது எதிரியாக கருதக்கூடிய இஸ்ரேல் கொவிட்-19 வைரஸ் தொற்றில் முழு உலகுமே அல்லோலகல்லோலப்படுகையில் அமைதியாக உள்ளது.

இதற்கு காரணம் அங்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தான். கடந்த வருடத்தில் மாத்திரம் மூன்று தேர்தல்களை இஸ்ரேல் மக்கள் எதிர்கொண்டனர். இஸ்ரேலின் தற்போதைய பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் ஆகிய இருவருமே ஆட்சியை கைப்பற்ற கடுமையாக போராடினர். இந்நிலையில்  பெஞ்சமின் நெதன்யாகு மீது பல விதமான ஊழல் வழக்குகள் உள்ளன. 

இதனை தேர்தல் பிரசாரத்திற்கு வலுவான காரணியாக்கி  ஊழல்வாதி ஒருவரை இஸ்ரேல் மண்ணை ஆழ விட மாட்டேன் என பென்னி காண்ட்ஸ் பிரசாரம் செய்தார்.   

இவ்வாறு இரு தரப்புக்கு மத்தியில் கடும் போட்டி தன்மை  மேலோங்குகையில் பெஞ்சமின் நெதன்யாகு , முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுகிறார். அதாவது ஜோர்தான் உரிமை கொண்டாடும் மேற்கு பகுதியையும் இஸ்ரேல் எல்லையுடன் உள்ள காஸாவின் ஒரு பகுதியையும் இஸ்ரேலுடன் இணைக்க போவதாகவும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் முதல் வேளையாக இதனை செய்து முடிப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பானது இஸ்ரேல் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டாலும் பாலஸ்தீனம் உள்ளிட்ட அந்த வலயத்தின் ஏனைய அரபு  நாடுகள் மத்தியில் இஸ்ரேலின் இவ்வகையான ஆக்கிரமிப்புகள் குறித்து கடும் எதிர்ப்பலைகள் மேலோங்கியது.

ஜெருசலம் நகரை மையப்படுத்தி பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் ஏற்பட்ட நீண்டநாள் மோதல்கள் இடம்பெறுகையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பம் ஜெருசலம் இஸ்ரேலுக்கே உரியது  என்றும்  ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்றும்  அறிவித்து ஆவணத்தில்  கைச்சாத்திடுகின்றார்.  இந்த சம்பவம் டொனல்ட் டிரம்ப் ஆட்சி பீடம் ஏறியப்போது இடம்பெற்றதாகும். 

இரு நாடுகளுக்குமிடையில் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்படுத்துவதாக கூறி  கொண்டுவரப்பட்ட ஒப்பந்தம் தான்  நூற்றாண்டின் ஒப்பந்தமாகும்  (deal of the century) . பாலஸ்தீனியர்கள் வாழும் பகுதிகளை அந்த மக்களுக்கும் இஸ்ரேலியர்கள் வாழும் பகுதிகளை அந்த மக்களுக்குமாக கொண்டே நூற்றாண்டின் ஒப்பந்தம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் பாலஸ்தீனியர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலின் ஆதிக்கம் நிறைந்த வகையிலேயே காணப்படுகின்றன. மறுபுறம்  குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது  பாலஸ்தீனியர்கள் தரப்பில் யாரும் கலந்துக்கொண்டிருக்க வில்லை . 

சிதறிக்கிடைக்கும் பாலஸ்தீனம் இஸ்ரேலின் பிடிக்குள் சிக்குண்டதாகவே நிலைமை உள்ளது. நூற்றாண்டின் ஒப்பந்தத்தை பயன்படுத்தி  இஸ்ரேல் தனது நிலப்பரப்பை வலுப்படுத்திக் கொண்டது. 

அதே போன்று  ஜோர்தன் குறித்தும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒரு காலக்கட்டத்தில் ஜோர்தன் பெரும்  வளம்கொண்ட நாடாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது அனைத்திற்கும் அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினாலும் ஜோர்தான் உள்ளிட்ட  அப் பிராந்திய  அரபு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இஸ்ரேலுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு சாதகமாக அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஜோர்தனுக்கு கிடைக்கப்பெறுகின்ற அமெரிக்க உதவிகள் தடைப்பட்டு விடும் என்பது மற்றுமொரு நெருக்கடியான நிலைமையாகும். 

இவ்வாறிருக்கையில் பெஞ்சமின் நெதன்யாகு ஜோர்தான் உள்ளிட்ட பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னரே   பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் ஆகியோருக்கிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டது. அதாவது துணை பிரதமர் என்ற ஒரு பதவியை உருவாக்கி அதனை பென்னி காண்ட்ஸிற்கு வழங்கப்படும் . 

அதே போன்று இஸ்ரேலின் புதிய நீதியரசர்கள் நியமனத்திலும் இவர்கள் இருவரினதும் கட்டுப்பாடுகள் காணப்படும். தனக்கு எதிரான ஊழல் வழக்குளிலிருந்து தப்பித்துக்கொள்ள நெதன்யாகுவிற்கு இது சிறந்த வாய்ப்பாகவும் அமைந்து விட்டுள்ளது.  இவ்வாறிருக்கையில் தற்போதைய பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னராகவே முன்னெடுக்கப்பட வேண்டிய  இந்த விசாரணைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

அது மாத்திரமல்ல கெரோனா வைரஸ் வந்தவுடன் முதன் முதலாக அனைத்து விமான சேவைகளையும் முடக்கி நாட்டை முழு அளவில் மூடியதும் இஸ்ரேல் தான்.  இவ்வாறு உள்நாட்டு அரசியலில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் பிரதமர்  நெதன்யாகுவின் காசா உள்ளிட்ட மேற்கு பகுதியை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம்  அனைத்தையும் சமாளிக்க கூடிய வகையில் அமைந்து விட்டது. 

இதனை கண்காணிக்கும் வகையிலேயே அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ கடந்த வாரத்தில் இஸ்ரேல் சென்றிருந்தார். அத்துடன் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ்  ஆகியோர்  பதவிப்பிரமாணமும் கடந்த 13 ஆம் திகதியே இடம்பெற்றது. புதிய திட்டத்தின் பிரகாரம் இஸ்ரேல் நிலப்பரப்பை அதிகரித்து கொண்டால்  அரபு நாடுகள் மத்தியில் இஸ்ரேலும் ஒரு பெரும் நிலப்பரப்பை கொண்ட நாடாகவே திகழும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48