ஐனநாயக மரபினை மீறி வாக்குரிமையயை பயன்படுத்த முடியாது - செல்வம்

15 May, 2020 | 08:35 PM
image

கொரோனா நோய்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழவிடுதலை இயகக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டபொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜாவின் 21 ஆவது நினைவுதினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியடியில் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாம் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம். மக்களுடைய ஐனநாயக முறை பயன்படுத்தப்படவேண்டும். மக்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கொரோனா தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாது. 

எனவே சூழலுக்கு ஏற்றவகையில் தேர்தலை நடாத்தவேண்டும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். மக்கள் கூட்டமைப்பை நிச்சயம் ஆதரிப்பார்கள். அவர்களிற்கு நம்பிக்கை தரக்கூடிய நிலமையை நாம் ஏற்படுத்த வேண்டும்.   

எங்களுடைய மக்களின் விடுதலை தான் எமது பிரதான நோக்கம். அதற்காகவே துப்பாக்கி ஏந்தினோம்.

அது புனிதமானதென்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் சுமந்திரன் தொடர்பாக எதிர்மாறான கருத்துக்களை நாம் இதுவரையில் கூறவில்லை.

எனினும் முக்கிய பதவியில் இருந்துகொண்டு விடுதலை போராட்டத்தை ஏற்கவில்லை என்று சொல்வது அவரது தனிப்பட்டகருத்து என்பதை ஏற்கமுடியாது. ஆயுதப்போராட்ட விடயத்தில் தமிழ் கூட்டமைப்பின் கருத்துக்கள் அத்தனையும் ஒன்றாக இருக்க வேண்டும்.

குறித்தவிடயம் தொடர்பாக சம்பந்தன் ஐயாவை சந்தித்து உரையாட இருக்கின்றோம்.

அத்துடன் அவர் தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்களில் சிங்களமொழி பெயர்ப்பு வந்திருக்கின்றது. முன்னாள் வடமாகாண அவைதலைவர்  சிவஞானம் அந்தவிடயம் தொடர்பாக சரியான விளக்கம் ஒன்றை அழித்துள்ளார். அதிலே சொல்லபட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை. சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்கைளை மாறிசொல்ல வேண்டிய நிலை எமக்கில்லை. அப்படி சொல்வது எங்களை மலினப்படுத்துவது போல தெரிகின்றது. என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49