கடும் காற்றுடன் கூடிய மழை ; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Published By: Digital Desk 3

15 May, 2020 | 07:19 PM
image

(இரா.செல்வராஜா)

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பிராந்திய அந்தமான் கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாளான பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையுமென வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறியதாவது,

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியிலும், அந்தமான் கடற்பிராந்தியத்தில் தென் பகுதியில் இணைந்துள்ள கடற்பிரதேசத்தில் உருவாகியிருக்கும் தாழமுக்க பிரதேசம் தொடர்நிலைக் கொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திரையினுடாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.

தாழமுக்க பிரதேசத்தின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக தென் மேற்கு பிராந்தியத்தில் இன்றுமுதல் சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும். இதனால் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டுக்கு மேலாக மணிக்கு 40-50கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். மத்திய,சப்பிரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக ஊவா அல்லது கிழக்கு மாகாணங்களில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும். இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.

இதேவேளை கொழும்பு முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடிக்கடி அதிகரித்து உயரும். ஆகையால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வதுடன், வளிமண்டலதிணைகளத்தின் எச்சரிக்கைகமைய செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02