பாராளுமன்றத்தை கூட்டும்  எதிர்த் தரப்பினரின் கூட்டுச் சதி அம்பலம் - செஹான் சேமசிங்க தகவல்

Published By: Digital Desk 3

15 May, 2020 | 07:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை செல்லுப்படியற்றதாக்கவே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்ட  அழுத்தம் கொடுக்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு செல்லுப்படியற்றது என்று எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். 

அத்துடன் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தற்போது இரகசிய பேச்சுவார்த்தைகளை இரு தரப்பினரும் முன்னெடுக்கின்றார்கள். இதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழு அங்கிகரித்த வேட்பு மனுக்களை கேள்விக்குட்படுத்துகின்றார்கள்.

தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக் கொண்ட வேட்பு மனுவை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. பாராளுமன்றத்துக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உண்டு.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினருக்கே பெரும்பாலான ஆதரவு உண்டு. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்பட்டால் நிச்சியம் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவை ஐக்கிய தேசிய கட்சியினர் இரத்து செய்வார்கள்.

இதன் பிறகு பொதுத்தேர்தலுக்கு மீண்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் . அப்போது இரு தரப்பினரும் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்யவே பாராளுமன்றத்தை கூட்டுமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள்.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் மக்களாணையினை இனியொரு போதும் பெற முடியாது. ஐக்கிய தேசிய கட்சியினை மக்கள் இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுடன் புறக்கணித்து விட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51