சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை மக்கள் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும் - பவித்ரா

Published By: J.G.Stephan

15 May, 2020 | 06:38 PM
image

சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை  அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பில் பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருவருகின்றனர். சட்டவிதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

கொவிட்-19 பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் 07ஆவது கூட்டம் நேற்று (14) சுகாதார அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இந்த விடயங்களை குறிப்பிட்ட அமைச்சர், மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் டெங்கு நோய்த்தாக்கம் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதில் கலந்துகொண்ட வைத்திய நிபுணர்கள், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் கொவிட்-19 சமூக மயப்படுத்தப்பட வில்லையென்பதை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

கொவிட்-19 தொற்று சமூகமயப்படுத்தப்படாத போதும் பொதுமக்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வயதானவர்கள், அங்கவீனமானோர், சிறுநீரக நோயாளர்களின் மாதாந்தக் கொடுப்பனவின் 70சதவீதம் தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02