கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - யாழ்.மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர்

15 May, 2020 | 04:57 PM
image

(எம்.நியூட்டன்)

கடற்தொழிலாளர்களுக்கு சமூர்த்தியும் அதனோடு இணைந்த உதவித்திட்டங்களே கிடைக்கப் பெற்றுள்ளதே தவிர வேறு எத்தகைய உதவிகளும் அரசாங்கத்தினால் எமக்குக் கிடைக்கவில்லை பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு விசேட உதவித் திட்டங்களைச் செய்யவேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இவ் விடையத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தாக்கத்திலும் கடல் தொழில் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியபோதும் ஆழ்கடலுக்குச் சென்று தொழில் செய்யமுடியாத நிலையில் சிறு தொழில் முயற்சிகளே இடம்பெற்று வருகின்றது. 

ஆழ்கடல் தொழில் சென்றாலும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தினால் இத்தொழிலை அனைவரும் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக குறிப்பிட்ட அளவிலானவர்களே தொழில் ஈடுபட்டு வருகின்றமையினால் போதியளவு கடல் உணவுகள் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

கடற்றொழிலாளர்களிடம் இடைத்தரகர்கள் கடல் உணவுகளை பெற்று அதிகளவான இலாபத்திற்கே மக்களுக்கு விற்பனை செய்கின்றார்கள்.

இதனால் கடலுக்குச் சென்று வருகின்ற தொழிலாளர்கள் உரிய விலையில் கடல் உணவுகளை விற்பனை செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.   பொது மக்களைப் பொறுத்தவரையில் கடற்றொழிலாளர்கள் மீதே இந்தக் குற்றச்சாட்டுகள்கள் கூறப்படுகின.

தொழிலாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு உரியவர்கள் அதற்கான ஒரு திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

வெளிமாவட்டங்களுக்கு குறைந்தளவிலான கடலுணவுகள் அனுப்பப்படுவதனால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலைச் செய்யமுடியாத நிலையே காணப்படுகின்றது எனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற கடற்றொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46