யாழில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதென எவரும் பீதியடையத் தேவையில்லை - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

15 May, 2020 | 03:34 PM
image

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணத்தில் கொரோனா  தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேர்மறை (பொசிட்டீவ்) என அறிக்கை வந்துள்ளது. எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளோம். அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாள்களுக்கு தனிமை படுத்தியுள்ளோம்.

ஐந்து பேருக்கும் 14 நாள்களின் பின்னர் மீண்டும் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் . எனவே இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களிற்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே நேற்றையதினம் தொற்று இனங்காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை,

ஆனாலும் சுகாதார விதிகளை பின்பற்றி ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தம்மை நோயில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயினை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும்.

எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்வதன் மூலமே கொரோனா  தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01